ஹா ஹா ஹா காமடிங்கோ நானே எழுதியது தமிழ் நண்பர்களை வைத்து

ரெண்டு சம்பந்தகாரங்க பேசிக்கிடுதாங்க :
சம்-1 :சந்தோஷத்தைப் பணம் கொடுத்து வாங்க முடியாது ,
சம்-2 : ஆனா கஷ்ட்த்தை வாங்க முடியும் ,
சம்-1 :அப்படியா !
சம்-2 :ஆமாங்க ... நாங்க வரதட்சணை கொடுத்தோமே !
**********************************************************************
தேனு : சாதா தோசை ரவாதோசை .. சரி ! அதென்ன கூட்டணிதோசை-னு போர்டு வெச்சிருக்கிங்க ?
இட்லிக்கார் :அதுவா ! பழைய மாவு , புளிச்ச மாவு , மீந்துபோனது.. எல்லாத்தையும் கலந்து சுட்டதுதான் !
********************************************************************
ரெண்டு மாமியார் பேசிக்கிறாங்க :
லல் : மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறார்..
மாஸ்க் : அப்ப பர்ம்னண்ட் வேலைல இருக்கார்னு சொல்லுங்க !
**************************************************************
சானே : சொந்த ஊரு எது ?
ரோபோ : அந்த அளவுக்கு நமக்கு வசதி இல்லீங்க, சொந்த வீடுதான் இருக்கு!
********************************************************************
தணி : முன்னே உங்க பையன் லா-காலேஜ் போறான்னு சொன்னீங்க, இப்ப மெடிக்கல் போறான்னு சொல்றிங்களே ?
ஓமப்பா :ஆமா முன்னே லா காலேஜ் பெண்கள் பின்னாடி சுத்தினவன் இப்ப மெடீக்கல் காலேஜ் பொண்ணுங்க பின்னாடி சுத்துறான் !
***********************************************
சித்தையா : என் மவனை ஏன் வெட்னரி டாக்டர் கிட்டே வைத்தியம் பண்ண கூட்டிப்போறே ?
மாமன்னர் ; நீங்கதானே சார் எம் மவன் வாயில்லா ஜீவன்னு சொன்னீங்க !
******************************************************
ஜாரி : என்னது பரீட்சைக்கு முதல் நாள்தான் தயார் பண்ணுவியா..! போதுமா அது ?
கவி : பிட் தயார் பண்றதை ஒரு வாரத்துக்கு முந்தியா செய்ய முடியும் ?
**************************************************
டாக்டர் வாத்தி :இது உங்கள் மகனின் உயிர் பிரச்சனை , கண்டிப்பா இந்த ஆப்ரேஷன் செய்தே ஆகனும்
தல : அதனாலதான் அவன் நேத்தே எங்கேயோ ஓடிட்டான் !!
**************************************************
மீசைக்கார் : அந்த நடிகை, இது என்னோட மானப்பிரச்சனை விடமாட்டேன்னு சொல்றாங்களே என்னாச்சி ?
பிட்டுக்கார் : படத்துல அவங்க குளிக்கிற ஸீனை சென்ஸார்ல கட் பண்ணிட்டாங்களாம்
*************************************************************
டாக்டர் பிரசாத்: ஆப்ரேசன்ல உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க .
வாணி :ஹீம். உங்களப்போய் கைராசி டாக்டர்ன்னு சொன்னாங்களே !!
************************************************
இட்லிக்கார் : என் மனைவி இட்லி பண்ணா மல்லிகைப்பூ மாதிரி இருக்கும்..
பச்ச : அப்படியா ?
இட்லிக்கார் : ஆமாம் , மீந்து போன இட்லிய தொடுத்து தலைல வெச்சிப்பாள்னா பாத்துக்கோங்க !
*********************************************
அனல் சகோ : டாக்டர் , நாலம் நம்பர் பேஷண்டுக்கு முன்னாடி ஆப்ரேஷன் பண்ணிட்டிங்க
டாக்டர் வாத்தி : இதுக்கு போய் ஏன் இவ்ளோ பதற்றப்படறே ?
அனல் சகோ : இல்ல டாக்டர் முதுகுல ஆப்ரேசன் பண்ணுறதுக்கு பதிலா முன்னாடி வயித்துல பண்ணிட்டிங்க !
**********************************************
டாக்டர் வாத்தி : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க ?
கோலம் : மருந்து கொட்டிருச்சி டாக்டர் !
******************************************
லல்லி : நான் என் கணவரும் வீட்டுவேலையப்பங்கு போட்டு செய்வோம் !
மல்லி : நிஜமாவா ?
லல்லி : ஆமாம் பத்துப்பாத்திரம் தேய்ச்சாக்கூட ஆளுக்கு ஐந்து தேய்ப்போம்
*************************************
நாயகன் : எப்படிடா உங்க மெட்ராஸ் டீரிப் , அத்தை வீட்டுல ஜமாய்ச்சிங்களா ?
மழைக்காதலன் : மண்ணாங்கட்டி ! எங்களை லாரில தண்ணி பிடிக்கவும் தெரு ப்ம்புல தண்ணியடிக்கவும் விட்டுட்டு நாள்பூரா அத்தையும் மாமாவும் ஊரு சுத்திட்டு வந்தாங்க
**********************************************
கோல்ட் : உங்க மூணாவது பையனுக்கு பொண்ணு பாக்குறிங்களாமே மருமகள் எப்படி இருக்கனும் ?
மாமன்னர் : என்னோட கூட்டணி அமைத்து என்னோட மூத்த மருமகள்களை வீட்டை விட்டு ஓரங்கட்டணும்...!
************************************
கார்த்திக் : தலைவர் வீட்டுல ஆயிரக்கணக்குல செருப்பு இருந்ததுக்கு அதிகாரிங்க கணக்கு கேட்டாங்களாமே .. தலைவர் என்ன சொன்னார் ?
வேல் : வாங்கினா கணக்கு காட்டலாம் , மேடைல வந்து விழுந்த்துக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதாம்ன்னாராம்
************************************
அப்புறம் ஒரு மெகா கடி :இன்னைக்கு சமையல் குறிப்பு ரொம்ப இன்ரஸ்டிங்கா இருந்திச்சிங்க , நாளைக்கு உங்களுக்கு அதை சமைத்து தரபோறேன்
என்ன அது ?
ஸ்டவ்ல வெந்நீர் வைத்து அதுல ஹார்லிக்ஸ் கரைச்சு கொடுக்கப்போறேன்
***************************************************************************
இது தொடரும் .......................