2.22.2011

எவண்டா மணி எனக்கு ஆர்டர் போடறது ?

பிடித்த காமடி சில :



போஸ்ட்மேன்னும் சர்தார்ஜியும் பேசிக்கொண்டது;

" சார்.......... உங்களுக்கு மணி ஆர்டர் போட்டிருங்காங்க..........."

" (பல்லை கடித்தபடி) எவன்டா அவன் மணி? எனக்கு ஆர்டர் போடறது ?


ஊருக்கு நல்லது பண்ண வசூலிப்பவரும் பணக்காரரும் பேசிக் கொண்டது;

" நம்ம ஊர்ல ஒரு நீச்சல் குளம் கட்டப் போறோம். உங்களால் முடிஞ்ச உதவியைச் செய்யணும்."

" சரி, பத்து குடம் தண்ணீர் தர்றேன்"


இரண்டு மாணவர்கள் பேசிக்கொண்டது;

" இரண்டு கழுதை சேர்ந்து கணக்குப் போட்டா எப்படி இருக்கும்? "

" தெரியலையே? "

" எங்கேயாவது உதைக்கும்! "


ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது;

" கணக்குப் பரீட்சைல எல்லாக் கேள்விக்கும் ஏணிப்படியை வரைஞ்சு வச்சிருக்கியே, ஏண்டா?

" கணக்குல ஸ்டெப்புக்குத்தான் மார்க்குன்னு நீங்கதானே சார் சொன்னீங்க!


ஒரு பையனும் பொண்ணும் பேசிக்கொண்டது;

" ஐ லவ் யூ! "

" ஐ டோன்ட் லவ் யூ! "

" நல்லா யோசிச்சு சொல்லு டியர் ! "

" கண்டிப்பா, ஐ டோன்ட் லவ் யூ! "

" ஓ. கே. வெயிட்டர்......... எனக்கு மட்டும் பில் போடு."

" ஏய்! ஏய்! ஐ லவ் யூடா! செல்லம்! "



இரண்டு சிறு வயது நண்பர்கள் பேசிக்கொண்டது;

" என் தம்பி ரொம்பவும் பயந்த சுபாவம். சூடா இட்லி கூட சாப்பிட மாட்டான்."

"ஏன்?"

" அதுல ஆவி இருக்குமே!



மன்னரும் சேகவனும் பேசிக்கொண்டது;

" மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்."

" அரண்மனைக்கு நாம் ஏற்கனவே 'கான்கீரிட்' போட்டாச்சு. ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!"



இது மினி பிட்டு :

இரு நண்பர்கள் பேசிக்கொண்டது;

உங்க வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்குதே....

அது வேற ஒண்ணும் இல்லீங்க........... என் ஒய்ஃப் பாத்திரத்தைத் தூக்கிப் போடுவா. என் மேல பட்ட அவ சிரிப்பா. படலைனா நான் சிரிப்பேன் .



கொசுறு தகவல்:

தலைப்ப கவர்ச்சியா வச்சாத்தான் மக்கள் படிக்கிறாங்க’னு குடிகார கொரங்கர் சொன்னதுக்காக அந்த தலைப்பே தவிர அதில் உள்குத்து வெளிகுத்து போன்ற எதுவும் இல்லே இல்லே :-)